தமன்னாவுக்காக குவியும் ரசிகர்கள்

தமிழில் அதிக கவர்ச்சி காட்டாமல் நடித்த தமன்னா, வெப்தொடர்களில் ஓவர் கிளாமராக நடிக்கிறார். ‘லஸ்ட் ஸ்டோரி’ வெப்தொடரில் படுகவர்ச்சியாக நடித்திருந்த அவர், இதன் 2வது பாகத்திலும் ஓவர் கிளாமராக நடித்துள்ளார். இதற்கிடையே ‘ஜீ கர்தா’ என்ற இந்தி வெப்தொடரில், படுக்கையறைக் காட்சியிலும் அவர் துணிச்சலுடன் நடித்திருந்தார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றி கடுமையான விமர்சனங்கள் வந்ந்தாலும், கவர்ச்சியான நடிப்பின் மூலம் அவருடைய நட்சத்திர அந்தஸ்து உயர்ந்துள்ளது.

எங்கு சென்றாலும் அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிகின்றனர். அதைப் பார்த்து தமன்னாவுக்கே ஆச்சரியமாக இருக்கிறதாம். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். அவர்களில் சிலர் அவரைத் தொட்டுப்பார்த்தும், கையைப்பிடித்தும் இழுத்துள்ளனர். இதனால் பேரதிர்ச்சி அடைந்த தமன்னா, பாதுகாவலர்கள் உதவியுடன் அங்கிருந்து ஓடிவிட்டார்.

The post தமன்னாவுக்காக குவியும் ரசிகர்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: