ஹரீஷ் கல்யாண், இந்துஜா நடிக்கும் ‘பார்க்கிங்’

‘பலூன்’ படத்தின் இயக்குனர் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கும் படம், ’பார்க்கிங்’. திரில்லர் கதை கொண்ட இதை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் கே.எஸ்.சினிஷ் தயாரிக்கிறார். இவர், அஞ்சலி நடிப்பில் வெளியான ’பலூன்’ படத்தின் இயக்குனர் மற்றும் தெலுங்கில் ’டிக்கிலோனா’, ’விவாஹா போஜனம்பு’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்.

‘பார்க்கிங்’ படத்தில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, அவரது ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு நடிக்கின்றனர். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

The post ஹரீஷ் கல்யாண், இந்துஜா நடிக்கும் ‘பார்க்கிங்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: