மலையாள சீனியர் நடிகர் பூஜப்புரா ரவி மரணம்

திருவனந்தபுரம்: மலையாள சீனியர் நடிகர் பூஜப்புரா ரவி, உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகர், பூஜப்புரா ரவி. நாடக நடிகரான அவர், 1976ல் மலை யாளத்தில் நடிக்க ஆரம்பித்தார். ‘கள்ளன் கப்பலில் தன்னே’, ‘ரவுடி ராமு’, ‘ஓர்மகள் மரிக்குமோ’, ‘அம்மிணி அம்மாவன்’, ‘முத்தாரம்குன்னு பிஓ’, ‘கிலுக்கம்’ உள்பட 800க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். 4,000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2016ல் ‘கப்பி’ என்ற படத்தில் நடித்திருந்தார். பூஜப்புரா ரவியின் இயற்பெயர் ரவீந்திரன். அவரது சொந்த ஊர் திருவனந்தபுரம் பூஜப்புரா என்பதால், பின்னாட்களில் அந்தபெயரிலேயே அழைக்கப்பட்டார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை பூஜப்புராவில் வசித்தார். பிறகு கேரளா இடுக்கி மாவட்டம் மறையூரிலுள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் பூஜப்புரா ரவிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் மரணம் அடைந்தார். பூஜப்புரா ரவியுடைய மரணத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள படவுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post மலையாள சீனியர் நடிகர் பூஜப்புரா ரவி மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: