‘அவதார்’ பாகங்கள் வெளியீடு திடீர் மாற்றம்

நியூயார்க்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ல் வெளியான படம், ‘அவதார்’. இப்படத்தின் 2வது பாகம், ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில், கடந்த 2022 டிசம்பர் மாதம் வெளியானது. இப்படமும் உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட்டாகி, வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. தற்போது இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அப்படங்களின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் திடீரென்று மாற்றியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: வரும் 2025 டிசம்பர் 19ல் ‘அவதார் 3’, 2029 டிசம்பர் 21ல் ‘அவதார் 4’, 2031 டிசம்பர் 19ல் ‘அவதார் 5’ ஆகிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் வெளியாகி 22 வருடங்கள் கழித்து 5வது பாகம் வெளியாகிறது.

The post ‘அவதார்’ பாகங்கள் வெளியீடு திடீர் மாற்றம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: