கன்னி

குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.