நிவின் பாலியின் புதிய படம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த ஆண்டு மகாவீர்யார், படவேட்டு, ஸ்டாட்டர்டே படங்கள் வெளியானது. இந்த ஆண்டு ‘துறமுகம்’ படம் வெளியானது. இதுதவிர தற்போது தமிழில் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல், ஏழு மலை’, மலையாளத்தில் ‘தாரம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நிவின்பாலி நடிக்கும் புதிய படம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘ஒம் சாந்தி ஓஷானா’, ஓரு முத்தச்சி கதா, சாராஸ், 2018 படங்களை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார்.

இவரின் முதல் படமான ஓம் சாந்தி ஓஷானாவில் நிவின் பாலி நடித்திருந்தார். 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தனது கனவு படமாக அறிவித்திருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. மற்ற நடிகர், நடிகைகள் தொழிநுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

The post நிவின் பாலியின் புதிய படம் அறிவிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: