சுபாஷ் சந்திரபோஸின் மர்ம மரணத்தை சொல்லும் ‘ஸ்பை’

சென்னை: ‘கார்த்திகேயா 2’ நிகில் சித்தார்த்தா, இயக்குனர் கேரி பி ஹெச் இணைந்து வழங்கும் திரில்லர் படம், ‘ஸ்பை’. இப்படம் வரும் ஜூன் 29ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் மரணத்தில் இன்றுவரை மர்மம் நீடித்து வருகிறது. அதை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. எடிட்டர் கேரி பி ஹெச் இயக்குனராக அறிமுகமாகிறார். ஈடி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கே.ராஜசேகர் ரெட்டி, சரந்தேஜ் உப்பளபதி இணைந்து தயாரித்துள்ளனர்.

ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இப்படத்துக் கான கதையை தயாரிப் பாளர் கே.ராஜசேகர் ரெட்டி எழுதியுள்ளார். நிகில் சித்தார்த்தா ஜோடியாக ஐஸ்வர்யா மேனனும், சான்யா தாக்கூரும் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் அபினவ் கோமடம், மகரந்த் தேஷ்பாண்டே, ஜிசு சென் குப்தா, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிருஷ்ணதேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் நடித்துள்ளனர். வம்சி பட்சிபுளுசு, மார்க் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீசரண் பகாலா, விஷால் சந்திரசேகர் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

The post சுபாஷ் சந்திரபோஸின் மர்ம மரணத்தை சொல்லும் ‘ஸ்பை’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: