திருவனந்தபுரம்: தெலுங்கில் வெளியான ‘விரூபாக்‌ஷா’ படத்தின் மலையாளப் பதிப்புக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியுள்ள சம்யுக்தா, ‘என் சாதிப்பெயரை நான் நீக்கியிருப்பது குறித்து, மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சொன்ன விஷயம் என் மனதைக் காயப்படுத்தி விட்டது. நான் எடுத்த முடிவு மிகவும் முற்போக்கானது. அதற்குப் பிறகும் கூட என் சாதிப்பெயருடன் சேர்த்து என்னை அழைக்கும்போது வெறுப்பாக இருக்கிறது. உள்ளூருக்கும், வெளியூருக்கும் செல்லும் நான், பழைய பெயராலேயே அழைக்கப்படுகிறேன். தமிழ்ப் பதிப்பு புரமோஷனுக்காக சென்னைக்கு சென்றிருந்தபோது கூட, என் சாதிப்பெயரையே சொல்லி அழைத்தனர். எனது இந்த முடிவு பலருக்கு புதுமையான விஷயமாக இருக்கும். சமூகத்தில் பலபேர் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளனர்.

எனவேதான் என் குடும்பப்பெயரை நீக்க முடிவு செய்தேன். அந்த முடிவு குறித்து என்னிடம் கேள்வி எழுப்பும்போது வேதனையாக இருக்கிறது. குறிப்பாக, ஷைன் டாம் சாக்கோ நான் எடுத்த முடிவு குறித்து, அதற்கு சிறிதளவும் சம்பந்தம் இல்லாத வேறொரு விஷயத்துடன் இணைத்துப் பேசியிருப்பது அதிக வருத்தத்தை அளித்துள்ளது’ என்றார். சில நாட்களுக்கு முன்பு ஷைன் டாம் சாக்கோ, சிறுபட்ெஜட் படங்களின் புரமோஷன்களில் சம்யுக்தா பங்கேற்பதில்லை என்று கடுமையாக குற்றம் சாட்டினார். அப்போது அவர், ‘நீங்கள் மேனனாகவோ, நாயராகவோ, கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ, யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால், உங்கள் வேலையை மிகச்சரியாக செய்ய வேண்டும்’ என்று மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

The post appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: