திடீரென்று இளையராஜாவை சந்தித்தது ஏன்?: ஸ்ரேயா விளக்கம்

சென்னை: யாமினி பிலிம்ஸ் சார்பில் ஆந்திர மாநில முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்கியுள்ள பன்மொழி படம், ‘மியூசிக் ஸ்கூல்’. இளையராஜா இசை அமைத்துள்ள இப்படம், வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. ஸ்ரேயா, ஷர்மான் ஜோஷி, ஷாம், பிரகாஷ்ராஜ், ஓசு பருவா, கிரேசி கோஸ்வாமி, லீலா சாம்சன், பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், பக்ஸ் பார்கவா, விநய் வர்மா, ஸ்ரீகாந்த் அய்யங்கார், வக்கார் ஷேக், ஃபானி ஆகியோருடன் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் குறித்து ஸ்ரேயா கூறியதாவது: இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி முறையின் அழுத்தத்தையும், பள்ளிக் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கல்விச் சாதனைகள் மட்டுமே முக்கியம் இல்லை, கல்வி இல்லாத மற்ற செயல்பாடுகளும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் இப்படத்துக்காக, 11 பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அதில் 3 பாடல்கள் கிளாசிக்கல் மியூசிக் முறையில் உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு நானும், இயக்குனர் பாப்பாராவ் பிய்யாலாவும் இளையராஜாவை நேரில் சந்தித்துப் பேசினோம். அப்போது எங்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் அவருக்கு தெரிவித்துக்கொண்ேடாம். எனக்கு மிகச்சிறந்த பெற்றோர் இருப்பதால், என்னால் நினைத்த விஷயங்களைச் செய்ய முடிந்தது. எனது உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். இப்படத்தின் கதையைக் கேட்டபோது அதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இது கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குனர் மிகச்சிறப்பான முறையில் திரையில் கொண்டு வந்துள்ளார். இளையராஜாவின் இசை அனைவரையும் மயக்கி, வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்வது உறுதி.

The post திடீரென்று இளையராஜாவை சந்தித்தது ஏன்?: ஸ்ரேயா விளக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: