புதுவையில் ரூ.1000கோடி முதலீடு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அறிவிப்பு. அசத்திய முதல்வர் நாராயணசாமி

துபாய் : துபாயில் வெளிநாட்டு வாழ் தமிழ் முதலீட்டாளர்கள் பங்கேற்ற‌ வணக்கம் புதுச்சேரி என்ற தலைப்பில்  கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் தொழில் கூட்டமைப்பான‌ சித்திரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஜெபகுமார் ஒருங்கினைப்பை மேற்கொண்டார். இதில் சிறப்பு விருந்தினராக புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார்.

அவர் புதுவையில் தொழில் தொடங்க வருமாறு வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார்.தொழில் தொடங்குவதற்கான‌ அனைத்து வசதிகளையும் வெகு எளிதாக ஏற்பாடு செய்து தருவதாகவும்,மேலும் சென்னை - பாண்டிச்சேரி நீர் வழி போக்குவரத்து தொடங்க  தொழில் நிறுவனங்கள் முன் வருமானால் உடனடியாக புதுவை அரசு சார்பில் ஒப்புதல் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாழ் தமிழர்களின் தொழில் நிறுவனங்கள் புதுவையில் பல்வேறு தொழில்களில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக தொழில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக மேடையில் அறிவித்தனர். இதற்கான விபரங்களை அடங்கிய குறிப்புகளை முதல்வரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து நன்றி தெரிவித்த புதுவை முதல்வர் நாரயணசாமி இது குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தொழில் தொடங்குவற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்தார்.

 

சிறிய மாநிலமான புதுவைக்கு ரூ. 1000 கோடி அளவில் முதலீடு செய்ய முன் வந்துள்ள‌ வெளிநாட்டு வாழ் தொழிலதிபர்களிடம் தமிழக அரசு இது போன்று முயற்சியில் ஈடுபடுமானால் மிகபெரிய அளவில் தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க முடியும் என தொழில் வல்லுநர்கள் தெரிவித்தனர். மேலும் தனது மாநிலத்திற்கு முதலீட்டை ஈர்ப்பதில் முதல்வர் நாராயணசாமி மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: