சவூதி,அமீரகம் ,குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் முதல் நோன்பின் இப்தார் நிகழ்ச்சி

துபாய்: இஸ்லாமிய பெருமக்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு சவூதி, அமீரகம், குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் துவங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறை கமிட்டி ரமலான் மாத நோன்பின் பிறைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேற்று 06-05-2019 திங்கள் கிழமை முதல் நோன்பு ஆரம்பமாகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனையோட்டி நேற்று முன் தினம் இரவு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பெரும்பாலானோருக்கு ரமலான் மாதம் முழுவதும் பகுதி நேரத்தில் மாத்திரம் பணி புரியக்கூடிய வாய்ப்புகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கியுள்ளன. முதல் நாள் நோன்பிற்கான இப்தார் நிகழ்ச்சி வளைகுடா நாடுகளில் நேற்று நடைபெற்றது. துபாயில் தேரா பகுதியில் ஈமான் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Related Stories: