ஐக்கிய அரபு நாடுகளில் குழந்தைகளிடையேயான நடைபெற்ற நடனப் போட்டி டான்ஸ் பெஸ்ட் -2019

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான புஜைராவில் ஏழு எமிரேட்டுகளையும் சேர்ந்த குழந்தைகளிடையேயான நடனப் போட்டி டான்ஸ் பெஸ்ட் -2019 கடந்த மே மூன்றாம் தேதி நடத்தப்பட்டது.  கிளாசிக்கல், சினிமா நடனங்களில்  தனி நபர் மற்றும் குழுக்கள் பிரிவுகளில் பல குழந்தைகள் போட்டியிட்டனர். திருமதி சுமதி முருகேசனின் வரவேற்புரையுடன் தொடங்கிய இவ்விழாவில் துபாயின்  89.4 தமிழ் பண்பலையின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கவிஞர் ஆர்.ஜே  நாகா அவர்களுக்கு   இலக்கிய சேவைக்கான விருதும் மேடைப்பாடகர் திரு.பிரதீப் அவர்களுக்கு இசை சேவை விருதும்  புஜைராவின் கலாச்சாரம் மற்றும் அறிவு மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் இயக்குனர் மாண்புமிகு சுல்தான் முஹம்மது மாலேய்  அவர்களால்  வழங்கப்பட்டது.

 சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புஜைராவின் பைன் ஆர்ட்ஸ் அகாடமியின் பொதுமேலாளர் மாண்புமிகு அலி ஒபைத் அல் ஹெபட்டி  அவர்கள்  வெற்றி பெற்றவர்களுக்கு சுழல் கோப்பையை வழங்கி பேசும்போது    இது போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தங்கள் ஆதரவு எப்போது இருக்கும் என்று தெரிவித்தார்.   தொழிலதிபர் டாக்டர் திருமதி.ஜெயந்தி மாலா சுரேஷ், தமிழ் பெண்கள் சங்க தலைவர் திருமதி.மீனாகுமாரி பத்மநாபன்,  பெஸ்ட் டிவி நிறுவனர் திரு.கலையன்பன்,   புஜைரா செயின்ட் மேரிஸ் பள்ளியின் நிர்வாகி  பாதர்.சுரேஷ் பாபு , புஜைரா ஜெம்ஸ் பள்ளி நிர்வாக அலுவலர் ஆரூண் அஹமத்,    திரு.அன்வர் அலி  அமீரக தி.மு.க,  விசிக சார்பில் திரு. சரவணன், மற்றும்  பல்வேறு அமைப்புகளையும் நிறுவனங்களையும் சேர்ந்த பலர் விருந்தினர்களாக கலந்து கொண்டு பங்கு பெற்ற  குழந்தைகளுக்கு பரிசுக்கோப்பைகளை வழங்கினர்.   

காலோ ஈவென்ட் நிறுவனத்தினரின்  இந்த விழா, டாக்ஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தலைவர் திரு முருகேசன் அவர்களின் முழு செயல்பாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  திருமதி அஞ்சுகம் ஒருங்கிணைப்பாளராகவும் 89.4 தமிழ் பண்பலை தொகுப்பாளர் ஆர்.ஜே சாரா தொகுப்பாளராகவும் விழாவைச் சிறப்பித்தனர்.  புஜைராவில் உள்ள நண்பர்கள் குடும்பங்களுடன் இவ்விழா சிறப்பாக அமைய ஒத்துழைப்பு நல்கினர்.  

பரிசு பெற்றோர் விபரங்கள்

*டாக்ஸ் எக்ஸ்பிரஸ் டான்ஸ் பெஸ்ட் 2019 டைட்டில் பரிசு

*கிளாசிக் பிரிவு சுகப்ரியா மதுப்பிள்ளை-புஜைரா  ,

சினிமா நடனப்பிரிவு அகிலேஷ் பாலாஜி - ராஸ் அல்  கைமா

*டாக்ஸ் எக்ஸ்பிரஸ் டான்ஸ் பெஸ்ட் 2019 ராக்கிங்  பரிசு  

*கிளாசிக் பிரிவு செலஸ்டியல் ராக்கிங் குழு  - புஜைரா

* சினிமா நடனப்பிரிவு ஏடிடி கேலக்ஸி ஸ்கொயர் குழு - ராஸ் அல்  கைமா

விழாவில் பரிசு பெற்ற குழந்தைகள் இதுபோன்ற போட்டிகள் தங்களின் திறமைகளுக்கு ஊக்கம் அளிப்பதாக தெரிவித்தனர்.

Related Stories: