அபுதாபியில் தமிழ் அமைப்பு சார்பில் சமூக நல்லிணக்க விழா

துபாய் : தமிழர்களை நிர்வாகிகளாக கொண்டு சமூக நல அமைப்பாக செயல்படும் மர்ஹபா சமூக நலப் பேரவை – அபுதாபி சார்பில்,   அபுதாபியில் பெரு அரங்கில் (லால்பேட்டை மெளலான மெளலவி அல்ஹாஜ் முப்தி S.A.அப்துர் ரப் ஹஜ்ரத் அவர்கள் நினைவரங்கம்)  ”சமூக நல்லிணக்க பெருவிழா”. ஷூஐபுதீன்  தலைமையில் நடந்தேறியது.

இந்த சிறப்புமிகு பெருவிழாவின் தொகுப்புரையை  S.A. ரஃபி அஹமது அவர்கள் வழங்கினார்

S.A. முஹம்மது தையுப்,  A.H. நஜீர் அஹமது,  M. தாஜூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  S.M. முஹம்மது அன்வர் மற்றும்  முஹம்மது மன்சூர்  கௌரவ முன்னிலை வகித்தனர்.

முதல் அமர்வை (இஃப்தாருக்கு முன்) செல்வி S. சஹ்லா ஷூஐப் இறைமறை வசனங்களை ஓதி துவக்கி வைக்க, சமூக நல்லிணக்கம் குறித்து துவக்க உரையினை மௌலவி M. முஹம்மது அபுதாஹிர் பாகவி (பேராசிரியர் சேலம் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி) அவர்கள் வழங்க, வரவேற்புரையை  N. முஹம்மது சித்தீக் அவர்கள் நல்கி வரவேற்க, தலைமை உரையை ​ M. ஷூஐபுதீன் வழங்கினார்.

வாழ்த்துரையை  சமுதாய புரவலர்கள் மற்றும் அமீரக தமிழ் சமூக அமைப்புகளை சார்ந்தவர்கள் சிறப்பாக வழங்கினார்கள்.

 M. ஷாஹூல் ஹமீது (CHAIRMAN – NOBLE GROUP OF COMPANIES),J. அப்துல் ஹமீது ஹாஜியார் (CHAIRMAN – BBMC GROUP OF COMPANIES),Ø  The Hon. President - I S C (India Social & Cultural Centre) திரு. ரமேஷ் பனிக்கர் அவர்கள், பாரதி நட்புக்காக தலைவர்  ராம கிருஷ்ணன், பொதுச்செயலாளர்  M.B. ஹலீலுர் ரஹ்மான் அவர்கள், தி.மு.க. திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் திரு. பிரின்ஸ் என்கிற இளவரசு மற்றும் பாவை ஹனீஃபா அவர்கள்,  மனிதநேய கலாச்சார பேரவை - அமீரக செயலாளர் மதுக்கூர் ஜனாப் அப்துல் காதர்,அபுதாபி இந்தியன் ஸ்கூல் தலைமை ஆசிரியர் ஜனாப் அலாவுதீன், தமிழ் மக்கள் மன்றம் தலைவர் திரு. சிவராமன்,  IMF இந்திய முஸ்லிம் பேரவை பொதுச்செயலாளர் ஜனாப் காதர் மீரான் , அமீரக காயிதே மில்லத் பேரவை – அபுதாபி அமைப்பு செயலாளர் ஆவை A.S. முஹம்மது அன்சாரி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரண்டாவது அமர்வில் (இஃப்தாருக்குப் பின்)1)    எழுத்தாளர், ஊடகவியலார், சூழலியல் ஆர்வலர்

ஆளுர். ஷாநவாஸ் ,(துணைப்பொதுச்செயலாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி),வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா B.A. BL. (தி.மு.க. மாநில செய்தி தொடர்பு இணைச்செயலாளர்),M. தமிமுன் அன்சாரி M.A., M.L.A. (நாகை சட்ட மன்ற உறுப்பினர், பொதுச்செயலாளர் மனித நேய ஜனநாயக கட்சி) உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

இறுதியாக நன்றி உரையை H. முஹம்மது ஃபைசல் அவர்கள் கூற, மௌலவி மர்ஜூக் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் சீரோடும், சிறப்போடும் நிறைவுற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மர்ஹபாவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இப்பெரு விழாவில் அமீரக வாழ் தமிழ் சமூகமும், தமிழின உறவுகளும், பல ஊர் ஜமா’அத்தார்களும், தாய்மார்கள், பெண்கள், குழந்தைகள் என 1200க்கும் மேற்பட்டோர் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பித்து தந்தார்கள்.

இப்பெருவிழாவில் மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பாக வைக்கப்பட்ட தீர்மாணங்கள்:

1)   ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக ரத்து செய்வது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

2)   தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையை இப்பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

3)   அபுதாபி நகரில், இரண்டாவது பெரிய இந்திய சமூகமான தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு கலாச்சார மையம் அமைந்திட அரசு சார்ந்த பரிந்துரை வேண்டும்.

4)   அமீரக வாழ் தமிழ் மக்களுக்கான நலன் மறுவாழ்வு தொடர்பாக தமிழக அமைச்சவையின் கீழ் ஒரு இலாக்கா உருவாக்கப்பட வேண்டும் (கேரளாவில் இதற்கான துறை செயல்பட்டுவருவது போல்).

5)   அபுதாபி நகரில் உள்ள பள்ளிகளில் (ஸ்கூல்களில்) தமிழை விருப்பப் பாடமாக எடுத்து படிக்க வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, தமிழை விருப்பப் பாடமாக பள்ளிகளில் தமிழின மாணவர்கள் எடுத்து படிக்க ஆவன செய்ய வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டது.

Related Stories: