துபாயில் தனியார் நிறுவன மேலாளராக இருந்து பாடலாசிரியையாக அறிமுகமாகும் பெண் கவிஞர்

துபாய்: பொருளாதரத்திற்காக வேறு துறைகளில் பணியாற்றினாலும் நம் மன நிறைவு தரும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் போது மகிழ்ச்சிக்கு அளவில்லை என்கிறார்  Mr. சந்திரமெளலி’யில் பாடலாசிரியையாக அறிமுகமாகியுள்ள வித்யா தாமோதரன்.  திரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலெட்சுமி சரத்குமார், சதீஷ், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன் உள்ளிட்ட பலர்  நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘Mr. சந்திரமெளலி’ சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார் இதில் ஆறு பாடல்களில் ஒரு பாடலை துபாயில் பணியாற்றும் பெண் கவிஞர் வித்யா தாமோதரன் எழுதியுள்ளார். இப்பாடலை நடிகர் சிவகுமார் மகள் பாடியுள்ளார்

இது குறித்து துபாயில் பணியாற்றும் கவிஞர் வித்யா தாமோதரன் கூறியதாவது.. சொந்த ஊர் அரக்கோணம் சென்னை பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றேன் ஏர் ஹோஸ்டாக பயிற்சி நிறைவு செய்துள்ளேன்.பகுதி நேரமாக டிவி தொகுப்பாளாராக பணியாற்றியுள்ளேன்.அதோடு விமான நிறுவனத்தில் கஸ்டமர் சர்வீஸ் துறையில் பணிபுரிந்தேன்.மாடலிங்க் துறையிலும் ஆர்வமுண்டு. 3 வருடங்களுக்கு முன் யுஏஇ வருகை தந்து தற்போது துபாயில் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்று தற்போது மேலாளராக பணியாற்றுகிறேன்  அதோடு உள்ளூர்  தமிழ் மற்றும் மலையாள டிவி நிறுவனங்களில் பகுதி நேர தொகுப்பாளாராக செயல்படுகிறேன். இசையமைப்பாளர் ஹர்சா கார்த்திக் இசையமைப்பு யுஏஇ பெண்கள் தினத்திற்கான பாடல் எழுதியுள்ளேன்.

சிறு வயதிலிருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம்  பள்ளி நாட்களில் கவிதை போட்டியில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு பெற்றுள்ளேன். சினிமாவில் சில படங்களுக்கு பாடல் எழுதியுள்ளேன் ஆனால் வெளிவரவில்லை இந்நிலையில்  இசைமைப்பாளர் சாம் சி எஸ்  அவர்களின் அறிமுகம் பேஸ்புக் மூலம் கிடைத்தது. அவரிடம் எனது படைப்புகளை அனுப்பியிருந்தேன் அவர் வாய்ப்பளிப்பதாக தெரிவித்தார்.  சொன்னது போன்று ஒரு நாள் காட்சியை விளக்கி பாடல் எழுதும் படி பணித்தார். நானும் உடனடியாக அனுப்பி வைத்தேன் .அப்பாடல் தான் மிஸ்டர்.சந்திரமொளலி படத்தில் இடம்பெற்றுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இசைமைப்பாளர். சாம் சிஎஸ்க்கு நன்றி. துபாயில் பணியாற்றினாலும் தாயகத்தில்தான் மனம் நிற்கிறது.தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமானல் பாடல்களை எழுத ஆர்வமாக உள்ளேன் என்றார்.

Related Stories: