லைம் லைட்டுக்கு திரும்பிய ரிச்சா

விஜய் நடித்த ‘ஷாஜஹான்’ என்ற படத்தின் நாயகி ஆக நடித்த ரிச்சா பலோட் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
கடந்த 2001ம் ஆண்டு விஜய் நடித்த ‘ஷாஜஹான்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா பலோட். இதனை அடுத்து ’காதல் கிறுக்கன்’ ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை ரிச்சா பலோட் கடந்த 2011ம் ஆண்டு ஹிமன்ஷூ பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். இந்த நிலையில் இப்போது, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரிச்சாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள உள்ளனர். அவர் சமீபத்தில் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Related Stories: