வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலா பயணிகள் ரசிப்பு

வால்பாறை: வால்பாறையில் வடகிழக்குப் பருவமழை இடைவெளி விட்டு பெய்கிறது. இதனால், பி.ஏ.பி., அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் ஆகிய இரு அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளது. இந்நிலையில், பருவமழையால் வால்பாறையில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், காலை, மாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, அக்காமலை, கவர்க்கல், வாட்டர்பால்ஸ், சின்கோனா உள்ளிட்ட எஸ்டேட்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டு வாகனங்களை மெதுவாக இயக்குகின்றனர். பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால், தொழிலாளர்கள் கையில் உறை அணிந்து தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேயிலை எஸ்டேட் பகுதியில் காலை, மாலை நேரத்தில் நிலவும் பனிப்பொழிவை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர்.

Related Stories: