பைக்காரா அணை நீர்மட்டம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி: தொடர் மழை காரணமாக பைக்காரா அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் படகு சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி - கூடலூர் சாலையில் சுமார் 22 கி.மீ., தொலைவில் பைக்காரா அணை அமைந்துள்ளது. வனப்பகுதிக்கு மத்தியில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணையில் உள்ள நீைர கொண்டு சிங்காராவில் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பைக்காரா அணையில் இருந்து கடநாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த அணையில் சுற்றுலாத்துறை கட்டுபாட்டில் உள்ள படகு குழாம் உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிந்து படகு பைக்காரா அணையில் படகு சவாரி செய்வது வழக்கம். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழை பின்பு, அவ்வப்போது சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதனால் அணைகள் ஏதுவும் நீர்மட்டம் உயராத நிலையில், மின் உற்பத்திக்காகவும், குடிநீர் ேதவைகளுக்காகவும் பைக்காரா அணையில் இருந்து நீர் எடுக்கப்பட்டதால் நீர்மட்டம் ெவகுவாக குறைந்தது. இதனால் படகுகள் இயக்குவதில் சிரமம் இருந்தது.

இந்நிலையில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக பைக்காரா அணை பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாகும். இதில்

தற்போது 94.3 அடி அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

 

இதனிடையே மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், ஓரிரு வாரங்களில் அணை முழுமையாக நிரம்ப கூடிய சூழலும் உள்ளது.நவம்பர் வரை மழை காலம் என்பதால் அணை முழுமையாக நிரம்பும் பட்சத்தில் திறந்து விட கூடிய வாய்ப்பும் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே அணை நீர்மட்டம் அதிகரிப்பால் படகுகள் நிறுத்தி வைக்கப்படும் மிதவைகள், நீர்மட்டம் உயர்வு காரணமாக மேலே வந்துள்ளது. இதனால் படகு சவாரிக்காக வர கூடிய சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: