வெள்ளப்பெருக்கு குறைந்தது குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி:  குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக குற்றாலத்தில் கடும் வெயில் வாட்டி வந்ததால், அருவிகள் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதனால் நேற்று முன்தினம் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு வெள்ளமாக கொட்டியது.

நேற்று மழை ஓய்ந்து மீண்டும் வெயிலடிக்கத் துவங்கியதையடுத்து வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. தடை விலக்கிக்கொள்ளப்பட்டதாலும், கோடையிலும் அருவிகளில் தண்ணீர் விழுவதாலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Related Stories: