கருங்கற்கள் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, மார்ச் 28:  கிருஷ்ணகிரியில் கருங்கற்கள் கடத்திய 3லாரிகளை பறிமுதல் செய்து டிரைவர்கள், உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில்புதூர் பகுதியில் கேட்பாரற்று 2 லாரிகள் நின்றது. அந்த லாரியில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, கருங்கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. பின்னர், அந்த 2 லாரிகளையும், அதிகாரிகள் பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், லாரிகளின் உரிமையாளர்களான மூங்கில்புதூரை சேர்ந்த துரை(48), மாரசந்திரம் ரவி(45), டிரைவர்களான கெங்கலேரி சக்திவேல்(25), குப்பச்சிப்பாறை கந்தன் என்பது தெரிந்தது.

தலைமறைவாக உள்ள 4பேரையும் தேடி வருகின்றனர். இதேபோல், கிருஷ்ணகிரி- மகாராஜகடை சாலையில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் பொன்னுமணி தலைமையில் அதிகாரிகள் ரோந்து சென்றபோது, அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை பறிமுதல் செய்து அதனை மகாராஜகடை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியின் உரிமையாளர், டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: