ரூ.19.78 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகள்

கிருஷ்ணகிரி, மார்ச் 27: ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.19.78 லட்சம் மதிப்பில் கட்டிட கட்டுமான பணிகளை மதியழகன் எம்எல்ஏ., துவக்கி வைத்தார். பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுதல் மற்றும் ரூ.5.78 லட்சம் மதிப்பில் பெண்கள் கழிவறை கட்டுவதற்கான பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. இந்த பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், பிடிஏ தலைவர் நடராஜன், பாலன், செல்வம், சவுந்திரம், கிருஷ்ணன், மகேந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர் நளினி, உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல், ஆசிரியர்கள் வேலன், தமிழ்செல்வன், ராஜேஸ்வரி, அந்தோணிகுரூஸ், வித்யா, அமுதா, சத்தியநாதன், எஸ்தர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: