மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு

ஓசூர்: ஓசூர் ராமநாயக்கன் ஏரி பகுதியில் குப்பைகளை அகற்றிய மேயர் தலைமையிலான அதிகாரிகள், மஞ்சப்பை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் ஓசூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில், மீண்டும் மஞ்சப்பை திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, ராமநாயக்கன் ஏரிக்கரை பூங்கா பகுதியில் மேயர் சத்யா, கமிஷனர் சிநேகா தலைமையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பைகளை வழங்கினர். பின்னர், மேயர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் துாய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மண்டல தலைவர் ரவி, வரிவிதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜேந்திரன், பகுதி செயலாளர் ராமு, மாமன்ற உறுப்பினர் மோசின்தாஜ் நிசார், மல்லிகா தேவி, கட்சியினர் மகேஷ்பாபு, குமார், மணி, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: