மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் முகாம்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் பயற்ணீஸ்வரர் கோயிலில் மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இரண்டாம் நாளாக தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். முகாமிற்கு கல்லூரி துணை தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார், ஒருங்கிணைப்பாளர் புதுமலர் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பரம்பரை அறங்காவலர் குழு நிர்வாகி ஜமீன் ராஜ்குமார் பழனியப்பன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக நாட்டு நல பணித்திட்ட அலுவலர் அமுல்ராஜ் மற்றும் ஸ்டீபன் வினிகோ முகாம் ஏற்பாடுகளை செய்தனர். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் ஆனந்தநாயகி நன்றி கூறினார். இந்த முகாமில் 55 மாணவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: