பெரம்பலூர், அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கோடைமழை

பெரம்பலூர்: பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று, இடியுடன் கொட்டித் தீர்த்த கோ டை மழை. மின்கம்பம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 18,19,20 ஆகிய மூன்று நாட்களுக்கு இடியுடன் மழை பெய்யுமென தமிழக வானி லை ஆய்வுமையம் முன்னறிவுப்பு செய்திருந்தது. தொடர்ந்து மார்ச் முதல் வாரத்திலிருந்தே வெயில் சுட்டெறித்து வந்தநிலையில் 18ம்தேதியும் மழை பெய்யாமல் மேக மூட்டத்து டன்தான் வானிலை காண ப்பட்டது. இந்நிலையில் நேற்று(19ம் தேதி) மாலை 6மணியளவில் பெரம்ப லூர் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் சூறைக்கா ற்று, இடியுடன் கோடைம ழை திடீரென கொட்டித் தீர் த்தது. வெயிலும் மழையும் ஒரே நேரத்தில் காணப்பட் டது. எதிர்பாராததிடீர் மழை யால் பெரம்பலூர் நகரில் சாலைகளில் மழைநீர் குட் டைபோல் தேங்கிக் கிடந் தது. கோடைமழை இரவு 9 மணிக்கு மீண்டும் பெரம்ப லூர் சுற்றுவட்டார கிராமங் களில் பெய்யத் தொடங்கி அரைமணி நேரம் காற்று டன் பெய்தது.

இன்றும்(20ம் தேதி) கோடை மழை பெய் யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. முறிந்த மின் கம்பம்... பெரம்பலூர் துறையூர் சா லையில், ஆலம்பாடி ஊராட் சிக்கு உட்பட்ட செஞ்சேரி முதல் காலனி வடக்கு பகு தியில் சூறைக்காற்றுக்கு மின் கம்பம் தரையோடு முறிந்து சாய்ந்தது. அவ் வாறு சாயும்போது அதிலு ள்ள மின் கம்பிகள் அறுத்து தெரித்து விழிந்தன. பொது மக்கள் வசிக்கும் பகுதியில் மின்கம்பம் முறிந்து, மின் கம்பிகள் அறுந்து விழுந் தும் சூறைக்காற்று வீசும் போதே மின்சாரம் துண்டிக் கப்பட்டதால் பெரிய பாதிப் புகள் ஏற்படவில்லை. தகவ லறிந்து அங்குவந்த ஊராட் சித் தலைவர் கல்பனா சீனி வாசன் உள்ளிட்டோர் மின் வாரியத்திற்கு தகவல் தெ ரிவித்து டிரான்ஸ்பாரத்தில் மின்நிறுத்தம் செய்துவிட்டு போர்மேன் செந்தில் உள்ளி ட்டோர் முறிந்த கம்பத்து இ ணைப்பைத் துண்டித்துவிட் டு மற்ற இணைப்புகளுக்கு மின் விநியோகம் வழங்கிட ஏற்பாடு செய்தனர். இன்று (20ம்தேதி) முறிந்த கம்பத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய உள்ளனர். பாடாலூர்: ஆலத்தூர் தாலுகாவில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், காரை, கொளக்காநத்தம்,செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர் குரூர், சிறுவயலூர்,நக்கசேலம், டி.களத்தூர் உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் திடீரெ சாரல் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரைமணி நேரம் தீர்த்த இந்த மழையால், வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரியலூர்: அரியலூர் நகர் பகுதியில் மாலையில் மழை பெய்தது. இதனையடுத்து மிகுந்த சத்தத்துடன்‌ கன மழை பெய்தவதாக உணர்ந்த மக்கள் மீது வானத்தில் இருந்து கல் விழுவது போல் தெரிந்தது. உற்று பார்த்த பொது வெள்ளை நிறத்தில் ஆலங்கட்டி மழை பெய்வதை பார்த்தனர். உடனடியாக அதனை தங்களுடைய உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி சந்தோஷத்தை பகிர்ந்ததனர். மழையில் நனைந்தபடி இளைஞர்கள் பனிக்கட்டிகளை சேகரித்து விளையாடினர். அரியலூரில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆலங்கட்டி மழை பெய்தது குறிப்பிடதக்கது. அதன் பிறகு சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

Related Stories: