பெரம்பலூர் நகராட்சி அலுவலர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு

பெரம்பலூர், செப்.29: கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலி த்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி அலுவலர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு ஏற்படுத்தப்படும் என்று மன்ற கூட்டத்தில் தலைவர் உறுதியளித்தார். பெரம்பலூர் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நேற்று காலை நகராட்சி அலுவலக கூட்டம் மன்ற அலுவலகத்தில் நேற்று (28ஆம் தேதி) நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் (திமுக) தலைமை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் (திமுக) நகராட்சி, ஆணையர் (பொறுப்பு) மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

சுசீலா செந்தில்குமார் : பெரம்பலூர் நகராட்சியின் 21 வார்டுகளிலும் குப்பைகள் தேங்காதபடி, மழைகால தொற்றுநோய் பரவாமல் தடுக்க குப்பைகளை விரைந்து அகற்றிட நடவ டிக்கை எடுக்க வேண்டும். வடிகால்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்து, கழிவு நீர் தேங்காமல் சீர மைத்திட வேண்டும்.

துரை காமராஜ் : நகராட்சி அலுவலர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமைத்து வருகைப் பதிவுகளைக் கண் காணிக்க வேண்டும். நகராட்சியில் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களின் தொல்லை அதிகமிருப்பதால் தெருநாய்களை பிடி த்து, தடுப்பூசி போடவும், வெறி நாய்களைப் பிடித்து அப்புறப் படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சித்தார்த் : துப்புரவுப் பணி யாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று விரைந்து ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக் க வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்திட வேண்டும். சேகர் : மழைக்காலம் என்பதால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்ட குடிநீராக இருந்தாலும், பெரம்பலூர் நகராட்சி குடிநீர்க் கிணற்று நீராக இருந்தாலும் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் முன்பாக குளோரினே சன் செய்த பிறகே விநி யோகிக்க வேண்டும். ஷஹார் பானு அப்துல் பாருக் : பெரம்பலூர் நகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை திட்ட இ ணைப்புகளை விரைந்து வழங்கிட வேண்டும். வடிகால் வசதிகளை புதிதாக ஏற்படுத்தித் தரவேண்டும்.

நகராட்சி தலைவர் அம்பிகா : கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூர் நகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் தெருவிளக்குகள் விரைந்து அமைத்துத் தரப்படும். பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் வருகையை கண் காணிக்க பயோமெட்ரிக் வருகைப் பதிவு விரைவில் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். கூட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழை பெய்து வருவதால் பெரம்பலூர் நகராட்சியில் புது சுகாதார உபயோக பயன்பாட்டிற்குத் தேவையான கிருமி நாசினிகள் மற்றும் கொசு மருந்து தெளிப்பதற்குத் தேவையான கிருமி நாசினி பொருட்கள் ரூ.7 லட்சத்தில் வாங்குவது. பெரம் பலூர் புது பஸ்டாண்டு அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வுமுகாமில் கைப் பம்புகளில்உள்ள பழு துகளை சீர் செய்யும் பணி 2 லட்சத்தில் மேற்கொள்வது. பொதுநதி 2022-2023 ஆம் ஆண்டு நிதியின் கீழ் வார்டு எண் 18 திறந்த வெளியில் ரூ2லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கூடம் அமைப் பது.

பெரம்பலூர் நகராட் சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கான துறைமங்கலம் கழிவு நீருந்து நிலைய த்தின் முன்பு பிரதான குழா யில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கசிந்து வெளியேறி செல்வதால் அங்குள்ள பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்வது. நகராட்சி பொது நிதியின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு நிதியின் கீழ் 21 வார்டுகளில் உள்ள மேன்ஹோல் எனப்படும் ஆள் இறங்கும் தொட்டிகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்வது. சாலைகளின் மட்டத்திற்கு தாழ்வாக உள்ள ஆளிறங்கும் தொட்டிகளை உயர்த்தும் பணிகளை ரூ.4.50 லட் சத்தில் மேற்கொள்வது. பெரம்பலூர் நகராட்சி விளாமுத்தூர் சாலையில் அமைந்துள்ள வீட்டு மனை பிரிவுகளுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைப்ப து.

அனைத்து வாடுகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள மின் மோட்டார்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை ரூ4.90 மதிப்பில் சீர்செய்வது. 20வது வார்டு சுந்தர் நகர்ப் பகுதியில் ரூ.12 லட்சத்தில் அங்க ன்வாடி மையம் கட்டுவது. நகராட்சியில் தினசரி சேக ரிக்கப்படும் பிளாஸ்டிக் திடக்கழிவு பொருட்களை பிளாஸ்டிக் குப்பைகளை கட்டு கட்டாக கட்டி பிளாஸ் டிக் பொருட்களை அருகில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு கொண்டு செல்ல ரூபாய் 5 லட்சத்தில் பைலிங் மெஷின் கொள்முதல் செய்வது. 15வது நிதி குழு மானிய நிதியில் ரூபாய் 17 லட்ச த்தில் நுண்ணுயிர் கலவை மையத்திற்கு க்ரஸ்ஸிங் கம் சேர்டிங் மெஷின் கொள்முதல் செய்வது என்பன உள்ளிட்ட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட்டத்தில் நகராட்சி கவுன்சி லர்கள், உதவிப் பொறியா ளர்கள், மேலாளர்கள் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: