நகர் மன்ற சாதாரண கூட்டத்தில் தகவல் பெரம்பலூர் மாவட்டத்தில் காணாமல்போன 65 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு சைபர் கிரைம் போலீசுக்கு எஸ்பி பாராட்டு

பெரம்பலூர், செப்.29: பெரம்பலூர் மாவட்டத்தில் காணாமல் போன 65 செல்போன்கள் மற்றும் இணையதளம் மூலம் இழந்த தொகை ரூ.5,43,500-ஐ மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்த பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரை எஸ்பி மணி பாராட்டினார். திருச்சி மண்டல ஐஜி சந்தோஷ்குமார் உத்தரவின்படி, திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் வழிகாட்டுதலில், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி தலைமையில், பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கணேசன் மேற்பார்வையில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி, சப்.இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், சிவமீனா மற்றும் போலீசார் சதீஷ்குமார், வேல்முருகன், முத்துசாமி ஆகியோர் இணைந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி முதல் 130 ஸ்மார்ட் மொ பைல்போன்கள் காணாமல் போனதாக கொடுத்த புகார்களில் சுமார் ரூ.4லட்சம் மதிப்பிலான 65 ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் பரிசு பொருள் மோசடி (2), கூகுல் விளம்பர மோசடி (1), யுபிஐ மோசடி (2), போலி இணையதளம் முகவரியில் ஆன்லைன் பர்சேஸ் (1) மூலம் பணத்தை இழந்துள்ளனர். அவ்வாறு பணத்தை இழந்த ஆறு நபர்களுக்கு (கார் பரிசு மோசடியில் ஒரு நபர் ரூ6,34,000 இழந்ததில் வழக்குப்பதிவு செய்து எதி ரிகளை டெல்லி சென்று கைதுசெய்து அவர்களிடம் இருந்து கைபற்றப்பட்ட ரூ 4.50லட்சத்தை நீதிமன்றம் மூலமாக பெற்றும், கூகுல் விளம்பர மோசடியில் (Google advertisement fraud-ல்) ஒரு நபர் ரூ.35 ஆயிரம் இழந்ததில் ரூ.30 ஆயிரம் சைபர்கிரைம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. யுபிஐ மோசடியில் 2 நபர்கள் ரூ.43 ஆயிரம் இழந்ததில் ரூ.43 ஆயிரமும் சைபர் கிரைம் போலீசார் கைப்பற்றினர்.

ஆன்லைன் பரிசு மோசடியில் ஒரு நபர் ரூ.7 ஆயிரம் இழந்ததில் ரூ.7ஆயிரம் கைப்பற்றப்பட்டது. போலி இணையதள முகவரியில் ஆன்லைன் பர்சேஸ் மோசடியில் ஒரு நபர் ரூ13, 500 இழந்ததில் ரூ 13,500ம் கைப்பற்றப் பட்டது.

இதன்படி புகார்தாரர்கள் இழந்த தொகை ரூ5,43,500-ஐ மீட்டு நேற்று (28ம்தேதி) பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழகன் மூலம் உரிய நபர்களிடம் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகக் கூட்ட அரங்கில் ஒப்படைக்கப்பட்ட து.

Related Stories: