4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கருணாநிதி படத்திற்கு மாலை

கிருஷ்ணகிரி, ஆக.8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. திமுகவினர் மவுன ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தினர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட அலுவலகத்தில் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன் தலைமையில் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நகர திமுக சார்பில் பெங்களூர் சாலையில் உள்ள சென்ட்ரல் தியேட்டர் எதிரில் இருந்து, மவுன ஊர்வலம் துவங்கப்பட்டது. இந்த ஊர்வலம் பெங்களூர் சாலை, பிஎஸ்என்எல் அலுவலகம் வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை வரை நடந்தது. பின்னர், அங்கு வைத்திருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நவாப் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் முன்னிலை வகித்தார்.

மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் பங்கேற்று, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 5 ரோடு ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கும், இதேபோல் மாவட்ட பதிவாளர் அலுவலகம், பழையபேட்டை ஆட்டோ ஸ்டேண்டு உள்ளிட்ட பகுதிகளிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினரும், முன்னாள் எம்பியுமான வெற்றிச்செல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், தொமுச கிருஷ்ணன், ஞானசேகரன், பஞ்சாயத்து தலைவர் ராஜா, நிர்வாகிகள் அஸ்லம், நாராயணமூர்த்தி, துரை(எ)துரைசாமி, ஜான்டேவிட், ஆறுமுகம், ரேஷ்மா இதாயத், தளபதிகோபி, நகர்மன்ற உறுப்பினர்கள் மீன் ஜெயக்குமார், சுனில்குமார், செந்தில்குமார், பாலாஜி, தேன்மொழி மாதேஷ், மீனா நடராஜன், சீனிவாசன், மதீன், வேல்மணி, பிர்தோஸ்கான், டாக்டர்.சுரேஷ்குமார், முகமது ஆசிப், மாதேஸ்வரி, உஷா சந்தோஷ், பரந்தாமன், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் புஷ்பா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜமுனாபுருஷோத்தமன், கராமத் மற்றும் மகளிர் அணியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மேற்கு மாவட்டம்: ஓசூரில் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினம் மற்றும் அமைதி பேரணி நேற்று அனுசரிக்கப்பட்டது.

ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் தொடங்கிய அமைதி பேரணி தாலுகா அலுவலக சாலை, நேதாஜி சாலை, காந்தி சிலை, பழைய பெங்களூர் பைபாஸ் சாலை வழியாக ஓசூர் ராம் நகரில் உள்ள அண்ணா சிலை அருகே நிறைவு பெற்றது. அமைதிப்பேரணிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஓசூர் மாநகர மேயர் சத்யா, முன்னாள் எம்எல்ஏ முருகன், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் தனலட்சுமி, சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுகுமாரன், வீராரெட்டி, ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், நிலைக்குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், சென்னீரப்பா, மண்டல குழு தலைவர் ரவி, பகுதி செயலாளர் ராமு, திம்மராஜ், வெங்கடேஷ், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எல்லோராமணி, இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், எல்பிஎப் கோபாலகிருஷ்ணன், மாணவரணி ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி வடிவேல், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுமன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர் 500க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்து கொண்டு கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: