படுக்கை வசதிகளை கலெக்டர் ஆய்வு புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு துவக்கம்

புதுக்கோட்டை, ஏப்.23: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான புதிய சிகிச்சை பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவின் கீழ் மாவட்ட தொடக்க நிலை இடையூட்டு சேவை மையத்தில் புதிதாக உணர்ச்சிகள் ஒருங்கிணைப்பு மற்றும் நரம்பியல் மேம்பாட்டு பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மூளை வாத குறைபாடுகள் ஆட்டிசம் மற்றும் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இங்கு தொழிற்பயிற்சி, இயற்முறை பயிற்சி, பேச்சு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பிறவி குறைபாடுகள், குழந்தை பருவ நோய்கள், வைட்டமின் பற்றாக்குறை, வளர்ச்சி குறைபாடுகள் ஆகியவை கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் . மேலும் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் பிரசவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகள் மற்றும் செவித்திறன் பரிசோதனை செய்யப்படுகிறது.

செவித்திறன் குறைபாட்டை கண்டறிய பிரத்யேக கருவியை கொண்டு பரிசோதனை செய்து உயர் சிறப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவகல்லலூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், நிலைய மருத்துவர் இந்திராணி உள்ளிட்ட பல மருத்துவர்கள், செவிளியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: