விரைந்து முடிக்க வலியுறுத்தல் திருமானூர் நிலையத்தில் விதை சுத்திகரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் வேளாண் இணை இயக்குநர் அறிவுறுத்தல்

அரியலூர்,ஏப்23: விதை சுத்திகரிப்பு பணியை விரைந்து முடித்து, விதையை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி திருமானூரில் விதை சுத்திகரிப்பு நிலைய பணிகளை பார்வையிட்டார். பின்னர், விதை சுத்திகரிப்பு பணியினை விரைந்து முடித்து உரிய காலத்தில்; விவசாயிகளுக்கு விதைகளை வழங்கிட ஏற்பாடு செய்திட அறிவுரை வழங்கினார். பின்னர், திருமானூரில் உளுந்து வம்பன்-8 விதைப்பண்ணையை பார்வையிட்டார். காரைப்பாக்கம் கிராமத்தில் கோடை எள் சாகுபடி வயல்களை பார்வையிட்டார். எள் பயிருக்கு எக்டருக்கு 5 கிலோ மாங்கனீஸ் சல்பேட் நுண்சத்து இட அறிவுரை வழங்கினார். மேலும் எள் பயிரில் அதிக மகசூல் பெற 1சத டிஏபி கரைசலை பூக்கும் தருணத்தில் ஒருமுறையும் 10 நாட்கள் கழித்து இரண்டாம் முறையும் தெளித்து பயனடைந்திட கேட்டுக்கொண்டார். பின்னர் பூண்டி கிராமத்தில் சொட்டுநீர் பாசன முறையில் சாகுபடி செய்துள்ள பாமாயில் சாகுபடி வயலினை பார்வையிட்டார்.

Related Stories: