ராஜபாளையம் தொகுதியில் சமுதாய தலைவர்களிடம் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

ராஜபாளையம், மார்ச் 24: ராஜபாளையம் தொகுதியில் சமுதாய தலைவர்கள், ஊர் நாட்டாமைகளிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று வாக்கு சேகரித்தார். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று கிருஷ்ணாபுரம், சோலைசேரி, தளவாய்புரம், முகவூர், ஜமீன் நல்லமங்கலம், புத்தூர், அருள்புத்தூர், மீனாட்சிபுரம், சொக்கநாதன்புத்தூர், கோவிலூர் ஆகிய கிராமங்களுக்கு சென்று அனைத்து சமுதாய தலைவர்கள், ஊர் நாட்டாமைகள், பொதுமக்களை சந்தித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கிருஷ்ணாபுரம், தளவாய்புரம், அருள்புத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களில் அமைச்சர் திண்ணை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். மீனாட்சிபுரம், கோவிலூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ பாதிரியார்களின் சந்தித்து அமைச்சர் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் அமைச்சர் பேசுகையில் ‘ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் என தொகுதிக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். அதிமுக அரசினால்தான் தொகுதிக்கு திட்டங்கள் கிடைத்துள்ளது.  எனவே, எனக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார். பிரசாரத்தில் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: