நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

நாமகிரிப்பேட்டை, ஏப். 23: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பெருமாகவுண்டன்பாளையம் காலனியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு, சாக்கடை கால்வாய் இல்லாததால் குடியிருப்பு பகுதியிலேயே ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நிற்கிறது. ஆண்டு கணக்கில் தேங்கியுள்ள கழிவுநீரால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள் அதில் கொட்டப்பட்டு உள்ளதால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் கொசுக்கடிக்கு ஆளாகி, தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீரை அகற்றக்கோரி, பல முறை  ஊராட்சி  நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், அதிகாரிகள் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: