கொரோனா விதிமுறை மீறல் ₹2.05 லட்சம் அபராதம் வசூல்

தர்மபுரி, ஏப்.23: கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூல் செய்தனர். தர்மபுரி உட்கோட்டத்தில் 149, அரூர் 73, பென்னாகரம் 117, பாப்பிரெட்டிப்பட்டி 85 என மொத்தம் 424 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து ₹84,800 அபராத தொகை வசூல் செய்யப்பட்டது. அதே போல், சமூக இடைவெளியின்றி வாகனங்களில் பயணம் செய்த 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ₹17 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

மேலும், இரவு ஊரடங்கை மீறி சாலையில்  பயணம் செய்த 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நேற்று 2வது நாளாக போலீசார் நடத்திய சோதனையில், 406 பேர் முகக்கவசம் அணியாமல் வந்ததாக வழக்குப்பதிவு செய்து ₹81,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமூக இடைவெளி கடைபிடிக்காத 44 பேரிடம் ₹22ஆயிரம் என மொத்தம் 450பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ₹1.03 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நடத்திய சோதனையில், 938பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ₹2.05லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: