மொரப்பூர் பகுதியில் வெண்டைக்காய் விலை சரிவு

அரூர், ஏப்.23: மொரப்பூர், கம்பைநல்லூர், நல்லம்பட்டி பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இரண்டு மாத பயிரான வெண்டை, 45 நாட்களில் விளைச்சல் தர தொடங்கும். தொடர்ந்து இரண்டு மாதம் வரை ஒரு நாள்விட்டு ஒரு நாள் அறுவடை செய்தால், நாள் ஒன்றுக்கு 120ல் இருந்து 150கிலோ வரை விளைச்சல் கொடுக்கும்.

கம்பைநல்லூர், மொரப்பூர், தர்மபுரி ஆகிய இடங்களில் மொத்த வியாபாரிகள் மண்டிகள் வைத்து கொள்முதல் செய்து, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவுக்கும் வெண்டையை விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

நாள்தோறும் சுமார் 12 டன் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு கிலோ ₹9 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது கிலோ ₹4க்கு மொத்த விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. சில்லறையில் கிலோ ₹15வரை விற்பனை

செய்யப்படுகிறது.

Related Stories: