இ.பாஸ், கோவிட் ஆர்டிபிசிஆர் சான்று கேட்பதால் கேரளாவுக்கு வேலைக்கு செல்பவர்கள் பாதிப்பு

செங்கோட்டை, ஏப்.23: கேரள மாநில காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து தற்போது ஆரியங்காவு ஐயப்பன் கோயில் அருகே புதிய சோதனை சாவடியை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வரும் வாகனங்களில் உள்ளவர்களிடம் இ-பாஸ், கோவிட் ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் ரிசல்ட் சான்று இருந்தால் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தமிழகத்திலிருந்து கோட்டைவாசல் வரை தமிழக அரசு பேருந்தில் சென்று அங்கிருந்து கேரள அரசு பேருந்தில் கேரளாவுக்கு  செல்லும் தமிழக பயணிகளும் ஆரியங்காவில் தற்போது நடைமுறைகளை கடுமையாக்கி இரண்டு சான்றுகள் இருந்தால் மட்டுமே கேரளாவுக்குள் நுழைய முடியும் என விதிமுறைகளை கடுமையாக்கியதால் கேரளாவுக்கு செல்ல முடியாமல் அங்கிருந்து மீண்டும் தமிழகத்தை திரும்பி வருகின்றனர்.இதனால் அன்றாடம் வேலைக்கு கேரளாவுக்கு சென்றுவரும் கூலித்தொழிலாளர்கள், வியாபார பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள புதிய நடவடிக்கையால் இவர்கள் ஆரியங்காவு வரை சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து தமிழகத்திற்கு திரும்பி வருகின்றனர். தமிழகத்தில் புளியரை சோதனைச்சாவடியில் தற்போது கேரளாவில் இருந்து வரும் பயணிகளிடம் இ.பாஸ் மட்டுமே பெறப்படுகிறது. மேலும் புளியரை சுகாதாரத்துறை சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் அங்கிருந்து அனுப்பப்படுகின்றனர். கேரளாவிலிருந்து வருபவர்களிடம் ஆர்டிபிசியல் சான்று கேட்கப்படுவது இல்லை. எனவே தமிழகத்தை போன்றே கேரளாவிலும் கோவிட்  நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: