காரைக்காலில் 53 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு

காரைக்கால், ஏப். 20: கடந்த 18.4.2021 அன்று 242 பேருக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில் காரைக்காலில் 28 பேர், திருநள்ளாறு, நிரவி, திருப்பட்டினம் மற்றும் வரிச்சிக்குடியில் தலா 4 பேர், நெடுங்காடு, கோட்டுச்சேரியில் தலா3 பேர், காரைக்கால்மேட்டில் 2 பேர், கோவில்பத்தில் ஒருவர் என 53 பேருக்கு கொரோனா நோய் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை தொற்று கண்டறியப்பட்டு 5,686 பேரில் 4,962 பேர் குணமடைந்துள்ளனர். 633 பேர் சிகிச்சையிலும், தனிமையிலும் உள்ளனர். 84 வயது பெண்மணி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உள்ளது. காரைக்கால் கொரோனா தடுப்பூசி 2 தவணைகளாக போடப்படுகிறது.

முதல் தவணையாக சுகாதாரப் பணியாளர்கள் 1,487பேருக்கும், முன்களப்பணியாளர்கள் 1,728 பேருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் 7,053 பேருக்கும், 45 வயது முதல் 59 வயது வரை இணை நோய்கள் உடையவர்கள் 8,856 பேருக்கும் என 19,124 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் தவணையாக சுகாதாரப் பணியாளர்கள் 505, முன்களப்பணியாளர்கள் 254, அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் 128, நாற்பத்தைந்து வயது முதல் 59 வயது வரை இணை நோய்கள் உள்ளவர்கள் 107 பேருக்கும் என 994 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தம் 20,118 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: