20,118 பேருக்கு தடுப்பூசி கொரோனா தொற்று அபாயம் வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு நடத்த தடைகோரி வழக்கு

மயிலாடுதுறை, ஏப்.20: சீர்காழி அருகில்உள்ள வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது. இதை தள்ளிவைக்கவேண்டும் என்று தமிழ்நாடு திருக்கோவில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவையினர் அரசுக்கு வேண்டுகோள்விடுத்தும் எந்த முடிவும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்புப் பேரவை மாநில தலைவர் மயில்ரவி மற்றும் மாநில செயலாளர் அழகிரி ஆகியோர் கூறுகையில், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயில் தருமபுர ஆதீனகர்த்தரால் நிர்வாகம் செய்யப்படுகிறது.

இந்து அறநிலையத்துறை ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த கோயிலின் திருப்பணிகள் சரிவர முடிவடையவில்லை. இந்நிலையில் வருகிற 24ம் தேதி யாகசாலை பூஜைகளும், 29ம் தேதி குடமுழுக்கு செய்வதற்கு பத்திரிகைகள் அடிக்கப்பட்டு விளம்பரப்படுத்தி வருகின்றனர். கோயில் கும்பாபிஷேக விழாவை காண்பதற்கு 5 லட்சம் பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் கூட்டத்தால் கொரோனா தொற்று ஏற்படும் அபயாம் உள்ளது. அரசுக்கு இதுகுறித்து கடந்த வாரம் இத்தகவலை அளித்தும் இதுவரை மாநில அரசோ மாவட்ட நிர்வாகமோ நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து கடந்த 17ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Related Stories: