சின்னாளப்பட்டியில் வேளாண் கண்காட்சி

சின்னாளபட்டி, ஏப்.19:விவசாயிகளுக்கு வெங்காயம் சேமிப்புக் கிடங்கு, ஆற்றலற்ற குளிர்அறை அமைப்பது குறித்து கண்காட்சியில் மாணவர்கள் விளக்கினார்கள். வேளாண் கண்காட்சியை நூற்றுக்கணக்கான விவசாயிகள் பார்வையிட்டனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் உதவி இயக்குநர் கே.கணேசன், கல்லூரி முனைவர் முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின்படி கிராமங்களில் தங்கி விவசாயிகள் பயிரிடும் முறைகளை ஆய்வு செய்து வருகின்றனர். பழைய செம்பட்டியில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் சச்சின்லயோலா, மகேந்திரன், முத்துக்குமார், பிரவீன்குமார், ரெங்கசாமி, துக்டன்செராப் ஆகியோர் வடிமைத்த வெங்காய சேமிப்புக் கிடங்கு நிலப்போர்வை (மாதிரி) ஆற்றலற்ற குளியலறை அமைப்பது எப்படி என குறித்த மாதிரிகளை வேளாண் கண்காட்சியில் வைத்திருந்து விவசாயிகளுக்கு விளக்கினார்கள். செம்பட்டி மற்றும் ஆத்தூரை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கண்காட்சியை பார்வையிட்டதோடு, மாணவர்களையும் பாராட்டினார்கள். பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி உதவி பேராசிரியர் குமரன் கண்காட்சியை பார்வையிட்டு சிறப்புரை ஆற்றினார். மாணவர் பிரவீன்குமார் நன்றி கூறினார்.

Related Stories: