55 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறை கண்காணிப்பாளர் தகவல்

வேலூர், ஏப்.18: வேலூர் சிறைகளில் 55 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷனி தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்திலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில் முதற்கட்டமாக 45 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதேபோல், பெண்கள் சிறையில் 10 பெண் கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி கூறுகையில், ‘முதற்கட்டமாக சிறைகளில் விருப்பம் தெரிவித்த 55 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் சிறைகளில் 45 வயது கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது’ என்றார்.

Related Stories: