மூடிக்கிடந்த தலைவர்கள் சிலை திறப்பு சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி

மன்னார்குடி, ஏப்.18: தினகரன் செய்தி எதிரொலியால் மன்னார்குடியில் மூடப்பட்டிருந்த தலைவர்கள் சிலைகள் திறப்பட்டதை யடுத்து சமூக ஆரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை துணியால் மூட, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு தலைவர்களின் சிலைகளை அதிகாரிகள் துணியை கட்டி மறைத்தனர். இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இறந்த தலைவர்களின் சிலையை துணியால் மறைக்க கூடாது என்றும் தற்போது உயிருடன் உள்ள கட்சித் தலைவர்கள் சிலைகளை மட்டும் துணியால் மூட வேண்டும் என, தேர்தல் கமிஷன் புது உத்தரவிட்டது. இறந்த தலைவர்களின் சிலையை துணியால் மறைக்க வேண்டாம் என தமி ழக தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகும் வாக்கு பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு மன்னார்குடி நகராட்சி அதிகாரிகள் தேர்தல் ஆணைய உத்தர வை மதிக்காமல் முன்னாள் திமுக அமைச்சர் மன்னை நாராயணசாமி மற்றும் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆகியோரின் சிலைகளை வெள்ளை துணி யால் மூடியது சமுக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது. மேலும், நகராட்சி நிர்வாகத்தின் முடிவுக்கு கடக்கும் எதிர்ப்பு கிளம்பியது.

இதுகுறித்து, நேற்றைய தினகரன் நாளிதழில் படங்களுடன் விரிவாக செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையர் கமலா உத்தரவின் பேரில் நகராட்சி பணியாளர்கள் சிலைகளில் சுற்றப்பட்டிருந்த வெள்ளை துணிகளை அகற்றி தலைவர்களின் சிலைகளை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தலைவர்களின் சிலைகளை திறக்க நடவடிக்கை எடுத்த தினகரன் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.

Related Stories: