ஆய்க்குடி பேரூராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

தென்காசி ஏப். 17: தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன்  மற்றும் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன்  ஆகியோரின் அறிவுறுத்துதல்படி ஆய்க்குடி பேரூராட்சி அலுவலகத்தில் திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள், கோயில் நிர்வாகிகள், கடைகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வியாபார பிரதிநிகளுக்கு கொரோனா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. செயல் அலுவலர் மாணிக்கராஜ் தலைமை வகித்தார். ஆய்க்குடி பேரூராட்சிக்குட்பட்ட வணிகர்கள் தங்களது வியாபார ஸ்தலங்களில் கடைபிடிக்க வேண்டிய அரசு அறிவித்த நெறிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பொதுமக்கள் கடைகளுக்கு வரும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்க கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ஆய்க்குடி எஸ்ஐ பலவேசம், சுகாதார ஆய்வாளர் கணேசன், வர்த்தக சங்க தலைவர் கதிரேசன், செயலாளர் கல்யாணசுந்தரம், பொருளாளர் மாரிமுத்து, வர்த்தக சங்க பிரதிநிதிகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்(பொ) தர்மர், மற்றும் பேரூராட்சி அனைத்து பணியாளர்களும்  கலந்து கொண்டனர்.

Related Stories: