அம்ேபத்கருக்கு மரியாதை

பழநி/ நத்தம், ஏப். 15: பழநியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சட்டமன்ற தொகுதி செயலாளர் முத்தரசு தலைமை வகிக்க, மாவட்ட பொருளாளர் திருமாறன், செய்தி தொடர்பாளர் பொதினிவளவன், துணை செயலாளர் பாவேந்தன் முன்னிலை வகித்தனர். பஸ்நிலையம் அருகே அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் நகர செயலாளர் மணவாளன், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் உள்பட பலர் பங்கேற்றனர். *நத்தத்தில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்கு விசிக ஒன்றிய செயலாளர் மயில்ராஜ் தலைமை வகித்தார்.  மூன்றுலாந்தர் அருகே அம்பேத்கர் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், தொகுதி துணை செயலாளர் தமிழ்முகம், ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் பகுஜன் சமான் கட்சி சார்பில் தொகுதி தலைவர் சுப்பிரமணி தலைமையில், ஒன்றிய செயலாளர் சந்திரன் முன்னிலையில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. பாஜக சார்பில் மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமையில் மரியாதை செலுத்தினர். *வத்தலக்குண்டு பஸ்நிலையம் முன்பு விசிக ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இதில் நிர்வாகிகள் குணசேகரன், முருகன், முத்தையா, விஜயகுமார், பொன்ராம், திராவிடன், காட்டுராஜா, மாயி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: