செந்துறை, பொன்பரப்பியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

அரியலூர், மார்ச் 5: செந்துறை மற்றும் பொன்பரப்பியில், பொதுமக்கள் சட்டமன்ற தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.வரும் ஏப்ரல் 6ம்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் தலைமையில், செந்துறை மற்றும் பொன்பரப்பி ஆகிய 2 இடங்களிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட ஏஎஸ்பி திருமேனி, மத்திய ஆயுத காவல்படை உதவி ஆணையர் பக்ரீத் லாலா, ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜ், அரியலூர் டிஎஸ்பி சபரிநாதன், செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் கொடி அணிவகுப்பை வழிநடத்தி சென்றனர்.இதில், எஸ்பி பாஸ்கரன் பேசுகையில்:பொதுமக்கள் அச்சமின்றி அவர்களது ஜனநாயக கடமையாற்றுவதற்கும், அமைதியாக தேர்தலை நடத்துவதற்கும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களியுங்கள் அரணாக நாங்கள் உள்ளோம் என்று கூறினார்.இந்த அணிவகுப்பில் ஆயுதப்படை உதவி ஆய்வாளர், துணை ராணுவ படையினர் 90 பேர் மற்றும் ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: