ஆறுமுகநேரி, காயல்பட்டினத்தில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

ஆறுமுகநேரி, மார்ச் 3: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூரில்  துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக  ஏப். 6ம் தேதி நடக்கிறது. பதற்றமான பகுதிகளில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு கொடியணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம். அந்தவகையில் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர் பகுதிகளில் தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. முக்காணியில் துவங்கிய ஊர்வலம் ஆத்தூர் பம்பையா தியேட்டர் பகுதியில் நிறைவடைந்தது. இதே போல் ஆறுமுகநேரி செக்போஸ்ட்டில் துவங்கிய கொடி அணிவகுப்பு ஊர்வலம் ஆறுமுகநேரி மெயின் பஜார், பேயன்விளை, ரத்தினாபுரி, காயல்பட்டினம் வழியாக கடற்கரை பகுதியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார், துணை ராணுவப்படையினர் மிடுக்குடன் பங்கேற்றனர்.

Related Stories: