குடியரசு தின விழா கோலாகல ெகாண்டாட்டம்

திண்டுக்கல், ஜன. 27:நாடு முழுவதும் 72வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த மைதானத்தில் கலெக்டர் விஜயலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சமாதானத்தின் அடையாளமாக வெண் புறாக்கள், வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து கலெக்டர் காவல்துறை, ஊர்க்காவல் படை, என்சிசி அணி வகுப்பு மரியாதையினை ஏற்று கொண்டார். பின்னர் கலெக்டர் சிறப்பாக பணிபுரிந்த 71 காவலர்களுக்கு முதல்வர் பதக்கமும், 27 பேருக்கு பாராட்டு சான்றிதழும் மற்றும் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 146 அலுவலர்கள், கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த முன்கள பணியாளர்கள், சமூகஆர்வலர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசுகளை வழங்கினார்.

கொரோனா தொற்றின் காரணமாக குடியரசு தினவிழாவில் வழக்கமாக நடக்கும்  தியாகிகளை கவுரவிப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கலைநிகழ்ச்சிகள்  உள்ளிட்டவை நடக்கவில்லை. இதனால் கலெக்டர் விஜயலட்சுமி சுதந்திர போராட்ட  தியாகிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  கவுரவித்தார். இதில் சரக டிஐஜி முத்துச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர்  கோவிந்தராசு, கலெக்டர் நேர்ளுக உதவியாளர் சிவக்குமார், ஊரக வளர்ச்சி முகமை  திட்ட இயக்குனர் கவிதா, மேற்கு வட்டாட்சியர் அபுரிஸ்வரன் மற்றும் அனைத்து  துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல அலுவலக வளாகத்தில் பொது மேலாளர் கணேசன், மதர் தெரசா லயன்ஸ் சங்கம் சார்பில் அண்ணா மாநகராட்சி பள்ளியில் சங்க உறுப்பினர் செபஸ்தியார், புனித மரியன்னை பள்ளியில் மாநகராட்சி முதுநிலை நகரமைப்பு அலுவலர் பெரியசாமி பேகம்பூரில் காங்கிரஸ் சார்பில் மாநகர மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகிக்க, சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அலியார், நாகல் நகர் ஜூம்மா பள்ளிவாலில் மாவட்ட உலாமா சபை தலைவர் முகமது அலி அன்வாரி  தேசிய கொடியேற்றினர்.

ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் வீரபாகு, சிக்கந்தர் நகரில் தீனிகிட்ஸ் மதரஸாவில் காந்தி மார்க்கெட் சேக்அப்துல்லா, தீயணைப்பு அலுவலகத்தில் நிலைய அலுவலர் அண்ணாத்துரை, வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுப்பையன், மாவட்ட ஆசிரியர் கல்வி- பயிற்சி நிறுவனத்தில் அன்புமுத்து, காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் சங்க தலைவர் பாலு, வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தேசிய கொடியேற்றினர்.

ரெட்டியார்சத்திரம்

ரெட்டியார்சத்திரம் யூனியனில் ஒன்றிய செயலாளரும், சேர்மனுமான சிவகுருசாமி கொடியேற்ற துணை சேர்மன் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர்

ஆத்தூர் யூனியனில் சேர்மன் மகேஸ்வரி கொடியேற்ற, துணை சேர்மன் ஹேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குஜிலியம்பாறை

குஜிலியம்பாறை யூனியனில் சேர்மன் உமாமகேஸ்வரி, தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சக்திவேலன், போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐ செல்வராஜ், தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் மருதை, பாளையம் பேரூராட்சியில் செயல்அலுவலர் ராஜலட்சுமி, பல்லாநத்தம் ஊராட்சி பள்ளியில் தலைமையாசிரியர் முருகன், உ.தாதனூர் பள்ளியில் தலைமையாசிரியை செல்லம்மாள், ராமகிரி பள்ளியில் தலைமையாசிரியர் கணேசன், சி.அம்மாபட்டி பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள், பாளையம் திருமுருகன் பள்ளியில் தலைமையாசிரியர் சக்திவேல், திருக்கம்பட்டி பள்ளியில் தலைமையாசிரியை தீபாராணி, வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டார அலுவலர் சந்தியா தேசிய கொடியேற்றினர்.

பட்டிவீரன்பட்டி

பட்டிவீரன்படி பேரூராட்சியில் செயல்அலுவலர் உமாசுந்தரி, அய்யம்பாளையம் பேரூராட்சியில் செயல்அலுவலர் பாலசுப்பிரமணி, சேவுகம்பட்டி பேரூராட்சியில் செயல்அலுவலர் ராஜசேகர், பட்டிவீரன்பட்டி ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் குமரேசன், கே.சிங்காரக்கோட்டை பிவிபி கல்வி நிறுவனத்தில் தலைவர் சுப்பிரமணி, என்எஸ்விவி பள்ளிகளில் சங்க துணை தலைவர் காமராஜ் தேசிய கொடியேற்றினர்.

வத்தலக்குண்டு

வத்தலக்குண்டு யூனியனில் சேர்மன் பரமேஸ்வரி, பேரூராட்சியில் செயல்அலுவலர் பாலசுப்பிமணியன், கூட்டுறவு பண்டகசாலையில் தலைவர் ரத்தினம் கொடியேற்றினர்.

பழநி

பழநி கோரிக்கடவு அரசு உதவிபெறும பள்ளியில் பேரூராட்சி தலைவர் நித்தியகல்யாணி, கொழுமங்கொண்டான் ஊராட்சியில் தலைவர் மணியரசன், கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் தலைவர் நாகராஜன், அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் தலைவர் வந்தனா கொடியேற்றினர்

Related Stories: