×

ஹசீனா நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கவில்லை: ஒன்றிய அரசுக்கு மம்தா கேள்வி

கொல்கத்தா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நிகழ்ச்சிக்கு அழைக்காததற்கு  ஒன்றிய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் பயணமாக கடந்த திங்கட்கிழமை டெல்லி வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை ஹசீனா சந்தித்தார். ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், ஹசீனாவும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், ஹசீனாவின் நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்காத ஒன்றிய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சிறப்பு கூட்டம், கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதில் பேசிய மம்தா, ‘ஷேக் ஹசீனாவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது. அவருடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவரை நான் சந்திப்பதால் ஒன்றிய அரசு ஏன் கவலை அடைகிறது என்பது புரியவில்லை?,’ என தெரிவித்தார். * அஜ்மீரில் ஹசீனா வங்கதேச பிரதமர் ஹசீனா நேற்று அஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற  காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தர்காவில் அவர் தொழுகை நடத்தினார்….

The post ஹசீனா நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கவில்லை: ஒன்றிய அரசுக்கு மம்தா கேள்வி appeared first on Dinakaran.

Tags : Hicina ,Mamta ,Union ,Kolkata ,Bangladesh ,Sheikh Hachina ,Mamta Panerjie ,
× RELATED “கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவு குற்றமில்லை” : ஒன்றிய அரசு