×

தேசதுரோக வழக்கில் மாணவர்கள் கன்கயா குமார், உமர் காலித்துக்கான தண்டனையை உறுதி செய்ய பரிந்துரை:

புதுடெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலை (ஜேஎன்யு) மாணவர்களான உமர் காலித் மற்றும் கன்கயா குமாருக்கு வழங்கிய தண்டனையை உறுதி செய்து பல்கலையின் உயர்மட்ட விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது.தூக்கிலிடப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல் குருவின் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு ஜேஎன்யு பல்கலையில் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரியில் சில மாணவர்கள் ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியின் போது சிலர் தேசத்திற்கு எதிராக கோஷமிட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் பல்கலையின் மாணவர் சங்க தலைவர் கன்கயா குமார், உமர் காலித் மற்றும் அனிபர் பட்டாசார்யா உள்ளிட்டோர்  தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, கடந்த 2016ம் ஆண்டு ஜேஎன்யு பல்கலை குழுவானது, காலித் மற்றும் வேறு இரண்டு மாணவர்கள் பல்கலை வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை செய்தது. கன்கயா குமாருக்கு 10,000 அபராதம் விதித்தது.இதுதவிர, 5 பேர் கொண்ட இந்த விசாரணைக்குழு, வேறு 13 மாணவர்களும் பல்கலையின் ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக கூறி அபராதம் விதித்தது. இதையடுத்து, மாணவர்கள் தரப்பில் பல்கலையின் இந்த அபராத உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறி, மீண்டும் பல்கலையின் உயர்மட்ட குழுவிற்கு திருப்பி அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், அபராதம் உள்ளிட்ட விவகாரங்களை உயர்மட்டக்குழு விசாரித்து வந்தது. இந்நிலையில், மாணவர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்டவற்றை உறுதி செய்து உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளதாக பல்கலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. குறிப்பாக,   உமர் காலித் மற்றும் கன்கயா குமாருக்கு விதித்த தண்டனையை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை