×

ஜிஎஸ்டி வரிகளை மேலும் பரிசீலனை செய்ய தயார் : ராஜ்நாத் சிங் தகவல்

புதுடெல்லி: பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை மேலும் மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த தேசிய வியாபாரிகள் கருத்தரங்கை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: ஜிஎஸ்டி. பல பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி சமீபத்தில் குறைக்கப்பட்டன. பல பொருட்கள் பூஜ்யம் மற்றும் 5 சதவீத வரி வரம்புக்குள் வந்துள்ளன. நாட்டில் 6.5 கோடி வியாபாரிகளில் 1.25 கோடி பேர் மட்டுமே ஜிஎஸ்டி.யின் கீழ் பதிவு செய்துள்ளனர். 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் 6.10 கோடி பேர் மட்டுமே வரி வரம்புக்குள் வந்துள்ளனர்.

பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள நாடுகளில் இந்தியா 6வது இடத்துக்கு வந்துள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் முதல் 5 இடத்துக்குள் வந்து விடும். உள்நாட்டு மொத்த உற்பத்தி இதே வேகத்தில் சென்றால் 2030 ஆண்டுக்குள் உலகின் முதல் மூன்று முன்னணி பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா வந்து விடும். கடந்த 4 ஆண்டுகளில் 150 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது. எளிதாக தொழில் செய்வதற்கு சாதகமான சூழல் நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்து 100வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் இந்தியாவில் 2 செல் போன் உற்பத்தி பிரிவுகள் மட்டுமே இருந்தன. தற்போது 120 செல்போன் உற்பத்தி பிரிவுகள் உள்ளன. இவ்வாறு கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : GST line, Rajnath Singh, Indian Trade Association
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...