×

வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி

 

நாமக்கல், அக்.27: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இப்பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. அடிப்படை எழுத்தறிவு பெற்றவர்களுக்கு வீட்டு வேலை செய்பவர் (பொது), 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு, இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் மற்றும் உதவி குழாய் பழுது பார்ப்பவர் (பொது), நான்குசக்கர வாகன சேவை உதவியாளர், 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டுபாய் ஆண் மற்றும் பெண் உதவியாளர், 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சிக்கு, 18 முதல் 45வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 14 நாட்கள் ஆகும். சென்னை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தனியார் நிறுவனங்களில், பயிற்சி அளிக்கப்படும். இந்நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் செய்து தரப்படும். பயிற்சி பெற தாட்கோ இணையதளம் (www.tahdco.com) மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும். விருப்பமுள்ளவர்கள் பயிற்சியில் சேர்ந்து பயன் அடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

The post வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Uma ,Thadko ,Adithiravidar ,Dinakaran ,
× RELATED போட்டியாளர்களுக்கு இலவச பயிற்சி