×

வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சேலம், ஜூன் 3: விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் வேலைவாய்ப்பு அமைப்பின் மூலம், மாணவர்களின் வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை டிவைன் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் தீபிகா விஜயன் மற்றும் துணை நிறுவனர் விஜயன் ஆகியோர் பங்கேற்று சுகாதார துறையில் பயன்படுத்தப்படும் மருத்துவ குறியீட்டு முறை சார்ந்த பயிற்சியினையும் அதன் தொடர்பான வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதில் கல்லூரியை சேர்ந்த இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி பேராசிரியை தமிழ் சுடர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உமா மகேஸ்வரி, சிவரஞ்சனி ஆகியோர் செய்திருந்தனர்.

The post வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Salem ,Vinayaka Mission ,VIMS ,Allied Health Sciences College ,Dean ,Dr. ,Senthilkumar ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்