×

வேலூர் மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை; 5 பேர் மீது வழக்கு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பொதுஇடத்தில் மது அருந்திய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர்- சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் வேலூர் வடக்கு போலீஸ் எஸ்ஐ நித்தியானந்தம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொதுஇடத்தில் அமர்ந்து 5 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். தொடர்ந்து போலீசார் பொதுஇடத்தில் மது அருந்திய ஏரியூரைச் சேர்ந்த தங்கராஜ்(36), சத்துவாச்சாரி சிஎம்சி காலனியைச் சேர்ந்த ராம்குமார்(35), காட்பாடி கோபாலபுரத்தைச் சேர்ந்த நாகராஜ்(55), அரியூரை சேர்ந்த வசந்த்(43), வசந்தம் நகரை சேர்ந்த ராஜேஷ்(40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பொது இடத்தில் யாரும் மது அருந்தக்கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில், சாலை ஓரங்களில் மது அருந்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

The post வேலூர் மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை; 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Vellore North Police ,SI Nithyanandham ,Vellore-Sathuvachari Service Road ,
× RELATED 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6...