×

வேலூர்-ஆற்காடு சாலையின் இருபுறமும் கால்வாய் அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆய்வு-ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் கணக்கெடுப்பு

வேலூர் : வேலூர்-ஆற்காடு சாலையில் கால்வாய் அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளதா? என்று நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.வேலூர்ஆற்காடு சாலை நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும் கால்வாய் வசதியில்லாமல் உள்ளது. இதனால் காகிதப்பட்டறை பகுதியில், மழைக்காலங்களில் அதிகளவில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே காகிதப்பட்டறை மட்டுமின்றி, வேலூர்ஆற்காடு சாலை முழுவதுமாக, கால்வாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் வேலூர்ஆற்காடு சாலையில் இருபுறமும் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக ஒரு புறம் மட்டும் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது சாலையோரம் கால்வாய் அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்தனர். மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் எத்தனை உள்ளது என்றும் கணக்கெடுப்பு நடத்தினர்.இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் ஆற்காடு சாலையில் கால்வாய் அமைக்க அந்த சாலை முழுவதுமாக அளவீடு செய்யப்படுகிறது. மேலும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் கணக்கெடுக்கப்படுகிறது. வருவாய்த்துறையினர் மூலம் சர்வேயர்கள் ஆக்கிரமிப்புகளை சரியான முறையில் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் இருப்பின் அகற்றுவார்கள். தற்போது கால்வாய் அமைக்க அளவீடு செய்யப்படுகிறது. விரைவில் டெண்டர் விடப்பட்டு, கால்வாய் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்’ என்றனர்….

The post வேலூர்-ஆற்காடு சாலையின் இருபுறமும் கால்வாய் அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆய்வு-ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Velur-Arkhudam road ,Vellore ,Vellur-Arkadu road ,Vellur-Arkudu Road ,Dinakaran ,
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்...